இலங்கை துணைத் தூதரை வெளியேற்ற வைகோ கோரிக்கை

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையின் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி எனும் நபர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும், திமிரோடும் இந்திய நாட்டையும், தமிழக மக்களையும் கிள்ளுக்கீரையாக எண்ணி வாய்க்கொழுப்பை வழிய விட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள வல்லரசு நாடுகளின் தூதர்கள் கூட இதுவரை இப்படி ஏளனமாகவும், எகத்தாளமாகவும் கருத்து கூறியதில்லை.
அமெரிக்காவிலே உள்ள இந்தியத் தூதர் ரோனன் சென் இந்திய தலைவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் துச்சமாகப் பேசியதைக் கண்டித்து கொந்தளிப்பு ஏற்பட்டதில் அவர் மன்னிப்புக் கேட்டார்.
கடந்த 20 நாட்களுக்குள் 7 தடவைகள் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை நமது கடல் எல்லையில் தாக்கியிருக்கிறது.
உண்மை இவ்வாறிருக்க, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படைத் தாக்குவதாக கூறுவது பொய்ச் செய்தி என்றும், அப்படி நடக்கவே இல்லை என்றும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அக்கிரமமாக கூறியுள்ளதோடு, கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையே இல்லை என்றும், நமது மீனவர்களை இலங்கை கடற்படை பாதுகாக்கிறது என்றும் கிண்டலாகக் கூறி உள்ளார்.
இந்தியக் கடற்படைக்கும், இலங்கை கடற்படைக்கும் இடையே உள்ள நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது என்றும் கூறியுள்ளார்.
தமிழ் இனத்தையே இழிவுப்படுத்தும் விதத்தில் ஏளன வார்த்தைகள் வீசிய துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை பகிரங்க மன்னிப்புக் கேட்கச் செய்வதோடு உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications