பன்றிக் காய்ச்சலுக்கு புதுச்சேரியில் 2வது பலி
புதுச்சேரி: புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சலுக்கு 2வது நபர் பலியானார்.
புதுச்சேரியில், கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதுப் பெண்மணி, ஜிப்மர் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் நேற்று இன்னொருவர் பலியாகியுள்ளார். அவர் 32 வயது ஆண். தமிழகத்தின் கட்டளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஜிப்மர் மருத்துவமனையில் இவர் பன்றிக் காய்ச்சல் காரணாக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் உயிரிழந்தார்.
முதலில் இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் ஜிப்மருக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அங்குதான் அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
புனே பலி 66 ஆனது
இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 66 பேர் பலியாகியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர்.
48 வயதான காசர்பாய் லோன்டே, 27 வயதாகும் விகாஸ் பிரம்நாயக் ஆகியோர் இன்று உயிரிழந்தனர்.
இதுவரை புனேவில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 66 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக புனேவில் சிறுமி ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார். அது முதல் தொடர்ந்து புனேவில் உயிர்ப்பலி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications