ஸ்டாலின் விழாவிற்கு எதிர்ப்பு - தீக்குளிக்க போவதாக காங். அறிவிப்பு
திருநெல்வேலி: ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு கருணாநிதியின் பெற்றோர் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அந்த பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க கோரியும் தீக்குளிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவது என்று காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் முத்துவேலர், அஞ்சுகம் பெயர் சூட்டப்பட்டு அவர்களின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிலையத்தை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 13 ம் தேதி அன்று திறந்து வைக்கின்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பஸ் ஸ்டாண்ட் இருந்த இடம் காமராஜர் திடல் என இருந்தது. எனவே, பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைத்து, அங்கு அவரது சிலையையும் வைக்க வேண்டும் என காங்கிரசார் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், போராட்டக்குழு ஜெயக்குமார், சிவாஜி முத்துக்குமார் ஆகியோர் கூறுகையில், ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைக்க மறுத்தை கண்டித்து எங்கள் பகுதி வீடுகளில் நேற்று முதல் கறுப்பு கொடி ஏற்றியுள்ளோம்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி சுடலைமுத்து என்பவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.
காக்கா பிடிப்போம்...
காமராஜர் பெயர் வைக்க கோரி கழுதை, எருமை மாடுகளிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடத்துவோம். காக்கா பிடிப்போம்.
திறப்பு விழா அன்று காமராஜர், கக்கன் திருஉருவ சிலையை அங்கு நிறுவுவோம். இதற்காக சிலைகள் தயாராக உள்ளது. மேலும், அன்று தீக்குளிக்கும் போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.
இதனால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழாவின் போது தீக்குளிக்கப்போவதாக திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசார் அறிவித்துள்ளது தமிழக அரசியலை பரபரப்பு அடையவைத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications