ரூ. 800 கோடி டெலிகாம் ஊழல் வழக்கை மூடுவதை எதிர்த்து மனு
டெல்லி: நாட்டை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய ரூ. 800 கோடி தொலைத் தொடர்பு ஊழல் வழக்கை மூட நினைத்துள்ள சிபிஐக்கு இடைஞ்சலாக ஒரு மனு வந்துள்ளது.
வழக்கை மூட சிபிஐக்கு அனுமதி தரக் கூடாது என்று கோரி டெல்லி கோர்ட்டில் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 199ம் ஆண்டு மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் எனப்படும் எம்டிஎன்எல் நிறுவனம் தனது குறுகிய தொலைவு செல்போன் சேவைக்காக, 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளுக்கான டென்டரைக் கோரியிருந்தது. மூன்று கட்டங்களாக இதை நிறைவேற்ற அது திட்டமிட்டிருந்தது.
இந்த டெண்டரைப் பிடிக்க மோட்டாராலோ நிறுவனம் எம்டிஎன்எல் உயர் அதிகாரிகளுக்கு பெருமளவில் லஞ்சம் கொடுத்ததாக அப்போது சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து எம்டிஎன்எல் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.பி. சின்ஹா, பொது மேலாளர் பி.சிங் உள்ளிட்ட 19 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை மூடி விட சிபிஐ முடிவு செய்துள்ளது. இந்தப் பின்னணியில், சிறப்பு சிபிஐ கோர்ட்டில், தொலைத்தொடர்பு கண்காணிப்பு என்ற என்ஜிஓ நிறுவனத்தின் செயலாளர் அனில்குமார் என்பவர் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், இந்த வழக்கை மூட சிபிஐக்கு அனுமதி தரக் கூடாது என்று கோரியுள்ளார். இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஓ.பி. சைனி, இந்த மனுவைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே இந்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதனால் தொலைத் தொடர்பு ஊழல் வழக்கை முடித்துக் கொள்ள நினைத்துள்ள சிபிஐக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications