முலாயம் மருமகளுக்கு எதிராக ராஜ் பாப்பர் போட்டி
லக்னெள: உத்தரப் பிரதேச மாநிலம் பெரோஸாபாத் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் முலாயம் சிங்கின் மருமகள் டிம்பிள் யாதவை எதிர்த்து காங்கிரஸ் நடிகர் ராஜ் பாப்பரை நிறுத்தியுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பறக்கிறது.
கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், பெரோஸாபாத் மற்றும் கன்னோஜ் தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் இரண்டிலுமே அவர் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் பெரோஸாபாத் தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அங்கு அடுத்த மாதம் 7ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அகிலேஷ் யாதவின் மனைவியும் தனது மருமகளுமான டிம்பிள் யாதவ் போட்டியிடுவார் என கட்சி தலைவர் முலாயம் சிங் அறிவித்துள்ளார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் ராஜ் பாப்பரும், பகுஜன் சமாஜ் சார்பில் பாகேல் சிங்கும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் ஒரு காலத்தில் சமாஜ்வாடி கட்சியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications