திருச்சி-ஷார்ஜா விமான சேவையை நிறுத்தக் கூடாது-அதிமுக எம்.பி.
திருச்சி: திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமான சேவையை நிறுத்தக் கூடாது என அதிமுக எம்.பி. ப. குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர், மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பிரபுல் பட்டேலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
நம் நாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்களோடு ஒப்பிடுகையில் திருச்சி விமான நிலையம் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் சேவையில் வியத்தகு வளர்ச்சியடைந்து வருகிறது.
கடந்த 2002-03ம் ஆண்டில் 1680 ஆக இருந்த விமானப் போக்குவரத்து எண்ணிக்கை 2008-09ல் 6 ஆயிரத்து 065 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் 2002-03ல் 93 ஆயிரத்து 810 ஆக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2008-09ல் 4 லட்சத்து 58 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சி விமான நிலையம் திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பயணிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகள், இலங்கைக்கும் செல்வதற்கும் முக்கியமானதாக உள்ளது.
இந்த நிலையில் திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக ஷார்ஜா வரை செல்லும் விமான சேவையைத் திரும்பப் பெற விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆனால், திருச்சி மற்றும் சுற்றுப்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 5 லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். இதனால் திருச்சியிலிருந்து ஷார்ஜா, குவைத்துக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகம். சரக்குப் போக்குவரத்தும் அதிகமாகவுள்ளது.
எனவே, திருச்சியிலிருந்து ஷார்ஜா வரை செல்லும் விமான சேவையைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications