ராதாபுரம் வணிக வளாகத்திற்கு காமராஜர் பெயர்-ஸ்டாலின்
திருநெல்வேலி: ராதாபுரம் பேருந்து நிலைய பிரச்சனைக்கு துணை முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பேருந்து நிலையத்துக்கு முதல்வரின் பெற்றோர் பெயரும், அங்கிருக்கும் வணிக வளாகத்திற்கு காமராஜர் பெயரும் சூட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் ரூ.2.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம், ரூ. 71 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றை துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 13ம் தேதி திறந்து வைக்கவிருக்கிறார்.
இந்த நிலையில் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்கள் பெயர் வைக்கப்பட இருக்கிறது. ஆனால், இதற்கு காங்கிரஸார் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் காமராஜர் பெயரை வைக்க வேண்டும் என உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை அறிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஜெயராமன் கூறுகையில்,
ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு முதல்வரின் பெற்றோர்கள் முத்துவேலர், அஞ்சுகம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அங்கு அவர்களது சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
காமராஜர் பெயர் வைக்கக்கோரி தனிநபர்கள் மட்டுமே போராட்டங்களை நடத்தினர். எனவே, பேருந்து நிலையத்தில் கட்டப்படும் வணிக வளாகத்திற்கு காமராஜர் பெயர் வைக்க துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications