அணையில் அரசியல் செய்கிறதாம் தமிழ்நாடு - சொல்கிறார் கேரள அமைச்சர்
கொல்லம்: சுப்ரீம் கோர்ட்டில் தங்களது 'கேஸ்' சுத்தமாக நிற்காது என்பதை புரிந்து வைத்துள்ள கேரள அரசு, முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதை தடுக்க முயலும் தமிழக அரசின் செயல் அப்பட்டமான அரசியல் என்று எரிச்சலுடன் கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்ட முயலுகிறது கேரளா. இதற்கான ஆய்வுக்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் படு விவரமாக கொடுத்து விட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த தமிழக அரசு அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் கேரளா அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த வழக்கில் கேரளாவுக்கு வலுவூட்டும் வகையில் ஒரு அம்சமும் இல்லை என்பதால் அவர்கள் டென்ஷனாகியுள்ளனர்.
இதுகுறித்து கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், தமிழக அரசின் செயலை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்ப்போம்.
வியாழக்கிழமை மத்திய அரசின் அனுமதிக் கடிதம் எங்களுக்குக் கிடைத்தது. ஆனால் தமிழ்நாடு ஏன் இதை எதிர்க்கிறு என்று புரியவில்லை.
தமிழகத்திற்கு உரிய நீரைத் தருவதுதான் எங்களது நோக்கமே. அதில் எந்த ரகசிய திட்டமும் இல்லை. இப்போது உள்ள அணை பல லட்சம் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் மிரட்டலாக உள்ளது.
உண்மையில் புதிய அணைக்கான ஆய்வு 2007ம் ஆண்டே தொடங்கி விட்டது. ஆனால் எந்தவித லாஜிக்கும் இல்லாமல் தமிழ்நாடு இதை எதிர்ப்பது அரசியல் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார் பிரேமச்சந்திரன்.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications