முதல்வரை நடிகர்கள் மட்டும் எப்படி அடிக்கடி சந்திக்க முடிகிறது - தலித் பாண்டியன்
கரூர்: தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக சேவர்கள், அரசு சங்க பிரநிதிகள், பொது மக்கள் என பலர் தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் சந்திக்க பல மாதங்கள் காத்து கிடக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் நடிகர் நடிகைகளும் எப்படி அடிக்கடி சந்திக்கின்றனர் என்று கேட்டுள்ளார் தலித் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன்.
இது குறித்து தலித் பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்,
பத்திரிக்கையாளர்கள் நாட்டின் கண்கள் போன்றவர்கள் . அவர்களால் மட்டுமே மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டு வர முடியும்.
அப்படி ஒரு செய்திக்காக தினமலர் நாளிதழ் செய்தி கட்டுரை வெளியிட்டு இருக்கலாம். மேலும் தங்களது செய்தியில் தவறு நேர்ந்துவிட்டதை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளது. அதை பெருந்தன்மையாக திரைப்படத் துறையினர் ஏற்றுக் கொண்டு இருக்காலம். அதை விடுத்து கைது வரை போராடி இருக்க வேண்டியதில்லை. இது நல்ல முன் உதாரணம் அல்ல.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யார் யாரிடம் எவ்வளவு நிதி அன்பளிப்பாக வாங்கியுள்ளனர் என்பதை ஒவ்வொரு வருடமும் தேர்தல் கமிஷனே பெறுப்பேற்று லிஸ்ட் வெளியிட வேண்டும்.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்யும் நடிகர் நடிகைகளுக்கு தமிழக அரசு விருதுக்கு தேர்வு செய்தவதை தடை செய்ய வேண்டும்.
தினமலர் ஆசிரியர் லெனினை கைது செய்த தமிழக போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை உடனே விடுதலை செய்யாவிட்டால் கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள காந்தி சிலையிடம் நள்ளிரவு 12 மணிக்கு சமூக ஆர்வலர்களை திரட்டி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications