விபத்து இல்லாத தீபாவளி-கமிஷனர் வேண்டுகோள்
சென்னை: இந்த ஆண்டு வெடிவிபத்து இல்லாத தீபாவளி கொண்டாட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி நெருங்கி விட்டது. இன்னும் நான்கு நாட்கள்தான் தீபாவளிக்கு உள்ளது. இந்தநிலையில், கடந்த மாதம் முதல் தொடர்ந்து பட்டாசு தொடர்பான விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த வீடு இடிந்து சிறுமி உள்பட பலர் இறந்தனர்.
இம்மாதம் தஞ்சை வானமர்கோட்டையில் வீட்டில் பட்டாசு தயாரித்த பெண் பரிதாபமாக பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன் சோழவந்தான் ரயில்வே நிலையத்தில் பட்டாசு வெடித்து இருவர் பலியாயினர்.
இதையடுத்து பட்டாசு விபத்துகளை தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் கூறுகையில்,
இந்த ஆண்டு விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் 466 தற்காலிக பட்டாசு கடைகளும், வட சென்னையில் 19 நிரந்தர பட்டாசு கடைகளுக்கும் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமானது. அதை கோல்டன் அவர்ஸ் என்பர். அந்த சமயங்களில் 108 மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தொடர்பு கொண்டால் பெரும் சிக்கலை தவிர்க்கலாம்.
பட்டாசு வெடிப்பவர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
நெல்லையில் தீவிர கண்காணிப்பு...
நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் குணசீலன் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
வெடிமருந்து கிட்டாங்கி, குடோன்களை போலீஸார் தணிக்கை செய்ய இருக்கின்றனர். வெடிகள் அதிக ஸ்டாக் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்.
உரிமம் இன்றி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வெங்காய வெடிகளை தயாரிப்பவர்களை பற்றிய தகவல்களை அறிந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சேமிப்பு கிடங்குகளில் வெடிமருந்து வாங்குபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். பேருந்துகளில் வெடிபொருட்களை கொண்டு செல்வது தடுக்கப்படும். உரிமம் பெற்ற சில்லரை விற்பனையாளர்கள், கடைகளில் தீ விபத்தை தவிர்க்க மணல் மற்றும் தண்ணீர் வைத்திருத்த வேண்டும்.
கடைகளின் உள்ளே பொதுமக்களை அனுமதிக்க கூடாது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. 125 டெசிபலுக்கு மேல் அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications