ஈராக் ராணுவ வீரருக்கு சென்னையில் முக சீரமைப்பு ஆபரேஷன்
சென்னை: ஈராக்கில் நடந்த துப்பாக்கி சூட்டில் முகத்தின் ஒரு பாதி முழுவதும் சேதமடைந்த நிலையில் சென்னை வந்த ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை மூலம் முகம் சீரமைக்கப்பட்டது.
ஈராக்கை சேர்ந்த ராணுவ வீரர் ஹசனியான் இப்ராஹிம் நூரி. பாக்தாத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இவரை கண்மூடித்தனமாக சுட்டனர்.
துப்பாக்கி சூட்டில் தப்பிக்க முயன்ற அவரது பின் கழுத்து பகுதியை துளைத்த ஒரு புல்லட் மூளையின் அடிப்பகுதி வழியாக சென்று வலது கண்ணின் அடிப்பகுதி வழியாக வெளியேறியது. இதனால் அவரது முகத்தின் வலது பக்க தாடை மற்றும் கண் எழும்புகள் ஆகியவை சேதமடைந்தன.
இதையடுத்து அவருக்கு பாக்தாத்தில் முதல் உதவி அளித்த கையோடு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள பாலாஜி பல் மற்றும் முக அறுவை சிகிச்சை மையத்தில் அவர் சேர்க்கப்ப்டடார். அங்கு டாக்டர் எஸ்எம் பாலாஜி தலைமையிலான குழு சேதமடைந்த அவரது முக தாடை, கண் எழும்பு மற்றும் தசைகளை அவரது விலா பகுதியில் இருந்து எடுத்த தசை மற்றும் டைட்டானிய பொருட்களை பயன்படுத்தி சீரமைத்தனர்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்த ஈராக் ராணுவ வீரர் பழைய முகத்துடன் கடந்த 10ம் தேதி சொந்த நாடு திரும்பினார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications