இலங்கை தூதரக தாக்குதல்: டெல்லி போலீஸ் வருகை-முன் ஜாமீன் கோரும் கிருஷ்ணசாமி

அதே போல டெல்லி போலீசார் தன்னையும் கைது செய்வார்கள் என்று கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி அக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மனு செய்துள்ளார்.
இதை அவசர மனுவாகக் கருதி விசாரிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
டெல்லியில் அக்டோபர் 2ம் தேதி புதிய தமிழகம் கட்சியினர் இலங்கையைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென இலங்கைத் தூதரகத்திற்குள் புகுந்த சிலர் அங்கு தாக்குதலில் இறங்கினர். போலீஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லாததால் தூதரக வளாகத்திற்குள் இருந்த பூத்தொட்டிகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
இந்த சம்பவத்தால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்தது. இந்திய அரசும் உடனடியாக வருத்தம் தெரிவித்துக் கொண்டது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஜகத் சிங் தலைமையிலான குழு திருச்சி வந்துள்ளது.
சென்னை போலீஸார் கொடுத்த தகவலின் பேரில் இவர்கள் திருச்சிக்கு வந்துள்ளனராம். தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் குணசேகரனை டெல்லி போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவர் திருச்சியில் வசிப்பதாக தமிழக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஒருவர் டெல்லி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் வந்துள்ளனராம்.
உறையூர் அரசு மருத்துவமனையில் குணசேகரன் வேலை பார்ப்பதாக சென்னை போலீஸார், டெல்லி போலீஸாருக்குத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து திருச்சி வந்துள்ள டெல்லி போலீஸார், அவரைக் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் தான் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் கிருஷ்ணசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications