குஜராத் துணிக் கடை அதிபரிடம் ரூ. 56 லட்சம் மோசடி- சென்னையில் மூவர் கைது
சூரத்: சூரத்தில் இருக்கும் துணி கடை ஒன்றில் ரூ. 56 லட்சத்துக்கு சரக்கு வாங்கி பணம் கட்டாமல் ஏமாற்றிய மூன்று பேரை போலீஸார் சென்னையில் கைது செய்தனர்.
இது குறித்து சூரத், சலாபத்புரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏஆர் பாலாஷ் கூறுகையில்,
சூரத் லாம்பே ஹனுமன் சாலையில் வசிக்கும் விக்ரம் ராஜ்புரோகித் என்பவர் கடந்த செப்டம்பர் 17ம் தேதி ஒரு புகார் தெரிவித்தார்.
அதில் ரிங் ரோடு பகுதியில் இருக்கும் அசோகா டவரில் நான் துணிக்கடை வைத்திருக்கிறேன். அங்கு கமல் சந்திரா, ரமேஸ்கிரி, சுரேஷ்கிரி, தர்மகிரி மற்றும் பிரகாஷ்கிரி கோஸ்வாமி என்னும் 5 நபர்கள் கடந்த ஜூன் 1ம் தேதி என்னை சந்தித்து, கடனுக்கு துணி வாங்கி சென்றனர்.
பின்னர் ஆகஸ்ட் 23ம் தேதி வரை என்னிடம் தொடர்ந்து கடனுக்கு துணி வாங்கி சென்றனர். ரூ. 56 லட்சம் துணி எடுத்த அவர்கள் பணம் கேட்ட போது தர மறுத்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சூரத்தில் இருந்த கமல் சந்திராவை நாங்கள் கைது செய்தோம். மேலும், ரமேஸ்கிரி என்பவர் தானாக வந்து சரணடைந்துவிட்டார். அவர்களிடம் விசாரித்த போது மற்ற மூன்று பேர் சென்னையில் இருப்பது தெரியவந்தது.
கடந்த வாரம் சென்னை வந்து அவர்களையும கைது செய்தோம். அவர்களிடம் துணிகளை மீட்க முயன்றோம். ஆனால், அவர்கள் அதை விற்று விட்டதாக கூறிவிட்டனர். அவர்களிடம் யாரிடம் விற்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த இருக்கிறோம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications