அல் கொய்தாவுக்கு பண கஷ்டம்!-செல்வ செழிப்பில் தலிபான்!!
லண்டன்: பொருளாதார மந்த நிலை தீவிரவாதிகளையும் போட்டுப் பார்த்துள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அல் கொய்தா தீவிரவாத அமைப்பு கடும் பொருளாதார சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறதாம். செலவுகளைச் சமாளிக்க திணறுகிறார்களாம்.
ஆனால் அதற்கு நேர் மாறாக தற்போது தலிபான்களுக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டுகிறதாம்.
பிபிசி செய்தி நிறுவன ஆய்வு இதைத் தெரிவிக்கிறது. இதுகுறித்து அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி டேவிட் கோஹன் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில்,
அல் கொய்தாவின் வருவாய் குறைந்து போய் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் அதன் பயிற்சி மற்றும் ஆளெடுப்புத் திட்டங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
நிதியுதவிக்காக பல்வேறு தரப்பையும் அணுகிக் கொண்டிருக்கிறது அல் கொய்தா. பல வருடங்களாகவே இப்படி நிதிப் பற்றாக்குறையில் அல் கொய்தா உழன்று வருவதாக அறிகிறோம். இதன் காரணமாக இதன் தாக்கம் தற்போது படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது என்றார்.
ஆனால் மறுபக்கம் தலிபான்கள் பெரும் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறார்களாம். காரணம், ஆப்கானிஸ்தானில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் மூலம் வரும் ஏராளமான வருவாய் தான்.
இதனால் தலிபான்களின் கட்டமைப்பு தற்போது பல்கிப் பெருகி விரிவடைந்துள்ளது. இதனால் இதற்கு பணம் எப்படி வருகிறது, என்பது கூட சரிவர தெரியாத நிலை உள்ளது. இந்த பணப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவது அமெரிக்காவால் கூட இயலாத காரியமாக உள்ளதாகவும் கோஹென் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், அல் கொய்தா தற்போது பலவீனமடைந்திருந்தாலும், அல் கொய்தாவின் நிலை மேம்படும்போது அவர்கள் சொல்வதை கேட்டுச் செய்யும் தீவிரவாதிகள் இன்னும் அழியாமல்தான் உள்ளனர். எனவே அல் கொய்தா பலவீனமடைந்து வருவதை முழுமையான மகிழ்ச்சியான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications