வசுந்தரா..முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அவரை பதவி விலகுமாறு கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை ஏற்க ராஜே மறுத்துவிட்டார்.
இதையடுத்து வசுந்தராவை நீக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது. ஆனால் அவரது ஆதரவாளர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 59 பாஜக எம்எல்ஏக்கள் டெல்லிக்கு வந்து வசுந்தராவுக்கு ஆதரவாக அத்வானியில் இல்லம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அதற்குள் ஜஸ்வந்த் சிங், அருண் ஷோரி ஆகியோரின் விவகாரங்கள் வெடித்ததாலும், அத்வானியை பதவி விலகுமாறு ஆர்எஸ்எஸ் உத்தரவிட்டதாலும் பாஜகவில் மேலும் குழப்பங்கள் உருவாகின.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ராஜே, தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு பாஜக கூட்டங்களில் பங்கேற்பதை நீண்ட நாட்களாகத் தவிர்த்து வந்தார்.
இப்போது கட்சியில் கொஞ்சம் அமைதி நிலவுவதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நேற்று கூடியது.
ஆனால், இக் கூட்டத்தை மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, கோபிநாத் முண்டே, வெங்கைய்ய நாயுடு, பால் அப்தே ஆகியோர் புறக்கணித்துவிட்டனர். இவர்கள் ராஜேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து வசுந்தரா விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இக் கூட்டம் கலைந்தது.
மேலும் ராஜஸ்தானில் வரும் நவம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் நடப்பதால் அதுவரை வசுந்தரா மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கலாம் என்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பதவி விலகியே ஆக வேண்டும் என்ற தகவலை ராஜேவிடம் தெரிவி்க்குமாறு சுஷ்மா சுவராஜை ஆட்சி மன்றக் குழு கேட்டுக் கொண்டது.
இது தவிர அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் நிலம் ஒதுக்கியது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications