பாய் மரப் படகில் சிறுமியின் உலக சுற்றுப்பயணம்

Subscribe to Oneindia Tamil

Jessica
சிட்னி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமியான ஜெஸிகா வாட்சன், 10 மீட்டர் நீளம் கொண்ட பிங்க் லேடி என்ற பெயரிட்ட பாய்மரப் படகில் உலகை வலம் வரும் சாதனைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

சிட்னியிலிருந்து இந்தப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார் ஜெஸிகா. கடலில் கடும் காற்று வீசி வருவதால் மிக மிக மெதுவாக முன்னேறி வருகிறார் ஜெஸிகா. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து படகைச் செலுத்தி வருகிறார் ஜெஸிகா.

கிட்டத்தட்ட எட்டு மாதம் கடலில் பயணம் செய்யவிருக்கிறார் ஜெஸிகா. இது அங்கு சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது. இவ்வளவு சின்ன வயதில் தனியாக பாய்மரப் படகில் பயணம் செய்வது ஆபத்தானது என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

இருப்பினும் ஜெஸிகான் தாயார் ஜூலி வாட்சன் இதை நிராகரித்துள்ளார். இதில் பயப்படவோ, தயங்கவோ எதுவம் இல்லை. ஜெஸிகா மிகுந்த நம்பிக்கையுடனும், துணிவுடனும் இருக்கிறார் என்றார் அவர்.

முதலில் வடக்கு நியூசிலாந்து செல்லும் ஜெஸிகா பின்னர் பிஜி, சமோவா, தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா செல்கிறார். கடைசியில் அவர் ஆஸ்திரேலியா திரும்புகிறார். கிட்டத்தட்ட 7400 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் பயணிக்கவுள்ளார்.

இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தால், உலகை கடல் வழியாகச் சுற்றி வந்த முதல் சிறுமி என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+