பன்றி காய்ச்சல்-சென்னையில் புதுச்சேரி பெண் பலி
சென்னை: புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மனைவி சங்கரிக்கு (48) பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயர் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், அவரது உடல் நிலை தேறவில்லை. கோமா நிலைக்குச் சென்ற அவர் நேற்று மாலை இறந்தார். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இந் நிலையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் நேற்று ஒரு பெண், 40 வயது ஆண் ஆகியோர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெண்ணின் நிலைமை மோசமாக உள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களையும் சேர்த்து ஜிப்மர் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதிப்புடன 50 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஏ.கே.தாஸ் தெரிவித்துள்ளார்.
6 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் ஸ்வைன்:
இந் நிலையில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மூன்று மாணவர்கள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில், பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேரும் கோரிமேட்டில் உள்ள மார்பு நோய் மருத்துவமனைக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் வந்தனர். அவர்களை சோதித்த போது அவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்களுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்து.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications