8 மாதக் குழந்தையுடன் தாய் தற்கொலை-கணவர் விஷம் குடித்தார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பாளையங்கோட்டையில் குடும்ப தகராறில் கணவர் விஷம் குடித்தார். இதனால் மனமுடைந்த மனைவி தனது 8 மாதக் குழந்தையுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள வெள்ளக் கோவிலை சேர்ந்தவர் ஆத்தங்கரையான் மகன் மாதவன். டெய்லராக உள்ளார். இவருக்கு மனைவி வசந்தா, ஆனந்த், சங்கர் மற்றும் 8 மாத குழந்தையும் உள்ளனர்.

மாதவன் குடிபழக்கம் உள்ளவர். நேற்று காலை இவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை மனைவி கண்டித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

மனமுடைந்த மாதவன் பாளை மார்க்கெட் அருகே வைத்து விஷம் குடித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கணவர் விஷம் குடித்த தகவல் அறிந்த வசந்தா தனது 3 குழந்தைகள் மற்றும் தனது உடலிலும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது ஆனந்த், சங்கர் இருவரும் ஓடிவிட்டனர்.

இதையடுத்து 8 மாத குழந்தை அரவிந்த் உடலில் தீ வைத்து விட்டு வசந்தா தன் உடலிலும் தீ வைத்து கொண்டார். வீடு முழுவதும் தீ பரவியதில் அரவிந்தும், வசந்தாவும் உடல் கருகி பலியாகியனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்பால் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+