உலக தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு ஏன் - கருணாநிதிக்கு வைகோ கடிதம்
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இதுதொடர்பாக விளக்கி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வைகோவின் கடிதம்...
கோவை மாநகரில் தமிழக அரசு முன்னின்று நடத்த இருக்கின்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், எங்கள் இயக்கம் பங்கேற்க அழைப்பு விடுத்து, கடிதம் அனுப்பியுள்ளீர்கள்.
1966-ல் தொடங்கி, இதுவரை நடைபெற்ற 8 மாநாடுகளும், உலகத் தமிழ் மாநாடு' என்ற பெயரிலேயே நடைபெற்றுள்ளன. இப்பொழுது தமிழக அரசு நடத்த முற்பட்டுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, அத்தகைய உலகத் தமிழ் மாநாடு அல்ல.
இதுவரை உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துவதற்குக் கடைபிடிக்கப்பட்ட விதிகள், முறை, மரபு, இவற்றுக்கெல்லாம் மாறாகவும், உலகத் தமிழ் மாநாடு என்பதற்கான ஒழுங்கு நியதியைப் புறந்தள்ளும் வகையிலுமே, கோவையில் நடத்திட உத்தேசிக்கப்பட்டு உள்ள மாநாடு அமையும்.
இது மட்டுமன்றி, உலகமெல்லாம் உள்ள தமிழர்கள், ஆற்ற முடியாத துக்கத்திலும், துயரத்திலும் ஆழ்ந்துள்ளனர். இலங்கைத் தீவில், சிங்களப் பேரினவாத அரசு, ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுக்கத் திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை, தமிழ்க்குலத்தின் வரலாற்றிலேயே இதுவரை எந்தக் காலத்திலும் நடைபெற்றிராத பேரழிவாகவும், கொடுந்துயராகவும் நேர்ந்துள்ளது.
எனவே உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சமெல்லாம் வேதனைத் தீ பற்றி எரிகிறது. சிங்களர் நடத்திய இனப்படுகொலை யுத்தத்துக்கு, இந்திய அரசு, ஆயுதங்களையும், அனைத்து உதவிகளையும் வழங்கி, தமிழ் இனத்துக்கு துரோகம் இழைத்தது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் தமிழக அரசு தவறியது.
இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு முன்னின்று நடத்த இருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல்வர் கருணாநிதியுடன் வைகோ நேரடியாக மேற்கொண்ட முதல் தொடர்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications