தீவிரவாத முதலீட்டாளர்கள்: செபி எச்சரிக்கை!
மும்பை: அமெரிக்காவைச் சேர்ந்த பல தீவிரவாத அமைப்புகள் இந்திய பங்குச் சந்தையில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை மையம் (செபி) எச்சரித்துள்ளது.
இதுபோன்ற முதலீட்டாளர்கள் குறித்து தங்களுக்குத் தெரிந்த தகவல்களை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து பங்கு பரிவர்த்தனை மையங்களுக்கும் செபி அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில தீவிரவாத அமைப்புகள், அதன் தலைமைகள் குறித்த தகவல்களையும் அனைத்து மையங்களுக்கும் செபி அனுப்பியுள்ளது.
"குறிப்பிட்ட எந்த வாடிக்கையாளராவது, நாங்கள் அனுப்பியுள்ள தகவல்களுடன் ஒத்துப் போவது தெரிய வந்தால் 24 மணிநேரத்துக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்..." என்று அந்த எச்சரிக்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் தீவிரவாதிகள் பட்டியலில் தாவூத் இப்ராகிம் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் பட்டியலை அனுப்பவிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் கிடைத்த 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களின் முதலீடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுவிடும் என செபி கூறியுள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications