செம்மொழி மாநாட்டு ஆய்வரங்க குழு தலைவராக சிவத்தம்பி
இக் குழுவில் கனிமொழி எம்பியும் இடம் பெற்றுள்ளார்.
கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிவத்தம்பி பங்கேற்பது குறித்து சந்தேகங்கள் கிளம்பி வரும் நிலையில் அவருக்கு இந்தப் பொறுப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது.
மாநாட்டில் அவர் பங்கேற்கிறார் என்று முதல்வர் அறிவிக்க, மாநாட்டில் பங்கேற்பது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை சிவத்தம்பி தெரிவித்ததாக தகவல்கள் வந்தன.
இந் நிலையில் செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஆய்வரங்க அமைப்புக் குழுவின் தலைவராக பேராசிரியர் முனைவர் கா.சிவத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக முனைவர்கள் ஒளவை.நடராஜன், பொன்.கோதண்டராமன் ஆகியோரும், செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராஜேந்திரன் ஆய்வரங்க அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆய்வரங்கப் பணிகளை திட்டமிடவும், செயல்படுத்தவும், துணைத் தலைவர்கள், துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும் ஆய்வரங்க அமைப்புக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, அனைத்து ஆய்வரங்கப் பணிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
டைரக்டர்கள் நடிக்கும் நாடகம்-செய்தி படம்:
இந்த மாநாட்டில், திரைப்பட இயக்குனர்கள் எழுதி நடிக்கும் வரலாற்று நாடகமும் இடம்பெறுகிறது. மேலும் 5 நிமிடம் ஓடும் செய்திப் படத்தையும் அவர்கள் தயாரிக்கவுள்ளனர்.
இத் தகவலை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
இந்த செய்திப் படம் மாநாடு முடிந்த பிறகு, அடுத்த 6 மாத காலத்திற்கு வெளிவரும் எல்லா தமிழ் படங்களின் இடைவேளையிலும், மாநாட்டு சிறப்புகளை சுட்டிக் காட்டும் வகையில் காட்டப்படுமாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications