திடீர் ஓய்வு- நெல்லை பல்கலைக்கழக ஊழியர் திடீர் மரணம்
நெல்லை: நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள். எனவே வேலைக்கு வரத் தேவையில்லை என்று நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழ நிர்வாகம் திடீரென கூறியதால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலை உறவினர்கள் பல்கலைக்கு எடுத்து வர முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் உதவியாளராக பணியாற்றியவர் பிசசாண்டி (58). இவருக்கு மனைவி சிவசங்கரி (43), மகன் முருகானந்தம் (23), மகள் சுப்ரீயா (21) ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் இவருக்கு நேற்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பிச்சாண்டி சிகிக்சை பலனின்றி இறந்தார்.
உடனே அவரது உறவினர்கள் உடலை சொந்த ஊரான செங்கோட்டைக்கு எடுத்து வந்தனர். வரும் வழியில் பல்கலை வாளகத்திற்கு உடலைக் கொண்டு செல்ல முயன்றனர். உடல் ஏற்றிச் சென்ற வாகனம் பல்கலை கழக வளாகக கேட்டிலேயே நிறுத்தப்பட்டது.
பிச்சாண்டியின் உறவினர்கள் மட்டும் துணைவேந்தர் சபாபதி மோனை சந்தித்து, அவரது மரணம் குறித்து தெரிவித்தனர். பிச்சாண்டியின் குடும்பம் ஏழ்மையில் இருப்பதால் அவரது மகனுக்கு வேலை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
உடனே பிச்சாண்டியின் மகனுக்கு வேலை கொடுப்பதாக துணைவேந்தர் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பிச்சாண்டியின் உடலை எடுத்து கொண்டு அவரது உறவினர்கள் செங்கோட்டைக்கு வந்தனர்.
என்ன காரணம்...?
பல்கலைக்கழக வாட்ச்மேனாக பிச்சாண்டி பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அவருக்கு உதவியாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
வாட்சமேனாக பணியாற்றுபவர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60, உதவியாளராக பணியாற்றுபவர்களுக்கு வயது 58. இந்த நிலையில் பிச்சாண்டிக்கு 58 வயது ஆகி விட்டதால், நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள், எனவே பணிக்கு வரத் தேவையில்லை என்று பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திடீரென இப்படிக் கூறியதால் அதிர்ச்சி அடைந்து பிச்சாண்டி மரணமடைந்தார் என்று தெரிகிறது.
இறந்த பிச்சாண்டியன் உடல் இன்று காலை 10 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications