ஒரு அம்மாவை சீண்டாதீங்க.. காயம்பட்ட புலி போல பாய்வேன்.. குஷ்பு கொடுத்த வார்னிங்.. ராதிகா பதிலடி!
சென்னை: சோசியல் மீடியாவில் சிலர் விமர்சனம் என்கிற பெயரில் நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலரையும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் அவர்களை மட்டும் அல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினரையும், குழந்தைகளையும் உருவகேலி செய்வது எந்த வகையில் நியாயம்? என்று நடிகை குஷ்பூ ஆதங்கமாக போஸ்ட் போட்டு இருக்கிறார்.
தன்னுடைய மகள்களை குறி வைத்து சிலர் உருவகேலி செய்து வருவதால் பொறுமையை இழந்த குஷ்பு ஒரு தாயை சீண்டாதீர்கள் என்று எச்சரித்து பதிவு வெளியிட்டு இருக்கிறார். அவரின் பதிவுக்கு ஆதரவாக நடிகை ராதிகா சரத்குமார், களம் இறங்கி இருப்பதால் இந்த விஷயம் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவு
சமீபத்தில் நடிகை குஷ்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னும் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து, "இது என்னுடைய குடும்பம், அன்பு, நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையில் உருவான குடும்பம். நாங்கள் இருக்கும் இடத்திற்கு சாதாரணமாக வந்துவிடவில்லை. பல போராட்டங்களை சந்தித்திருக்கிறோம். கடுமையாக உழைத்திருக்கிறோம்.
ரத்தமும், வியர்வையும் சிந்தி இருக்கிறோம். சில நேரங்களில் தடுமாறி இருக்கலாம்... தோற்று இருக்கலாம். கீழே விழுந்திருக்கலாம் ஆனால் மீண்டும் எழுந்து முழு வீச்சோடு போராடுவதை நாங்கள் ஒருபோதும் நிறுத்தியதில்லை என்று சொல்லி இருக்கிறார். மேலும் தன்னுடைய மகள்களின் வளர்ப்பு குறித்து சில விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

பிள்ளைகள் பற்றி உருக்கம்
பிரபலங்களின் பிள்ளைகள் என்ற அடையாளத்தை வைத்து எந்த சலுகையும் பெற என்னுடைய பிள்ளைகளை நான் அனுமதித்தது இல்லை என்றும் வெற்றி அவர்களை திசை திருப்பி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாகவும் கூறி இருக்கிறார். அதோடு ஒரு தாயாக யாரோ ஒரு அற்ப மனிதன் என் குழந்தைகளை அவமதிக்கவோ, மரியாதையின்றி நடத்தவோ, இரண்டு நிமிட மலிவான விளம்பரத்திற்காக அவர்களை பயன்படுத்திக் கொள்ளவும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதோடு என்னை விமர்சிப்பவர்களை அவர்களின் மொழியிலேயே எனக்கு பதிலடி கொடுக்க முடியும். ஆனால் என்னுடைய அம்மா வளர்ப்பு அப்படி இல்லை என்பதால் அமைதியாக இருக்கிறேன். அதனால் என்னுடைய அமைதியை பலவீனமாக நினைத்து விட வேண்டாம். ஒரு தாயை எப்போதும் சீண்டாதீர்கள்... காயம் அடைந்த புலி போன்றவள் தாய். தன்னுடைய குட்டிகளை காப்பாற்ற அவள் பாய்ந்து அழித்து விடுவாள் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
குஷ்புவின் வார்னிங்
நடிகை குஷ்புவின் மூத்த மகளின் திருமணத்தை சமீபத்தில் தான் நடத்தி வைத்திருந்தார். அதில் குஷ்புவின் நெருங்கிய திரை நட்புகள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் குஷ்புவின் இரண்டு மகள்களும் சினிமாவில் ஹீரோயினியாகவும் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். ஆரம்பத்தில் உடல் எடை அதிகரித்து இருந்தாலும் இப்போது தீவிரமான உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்து இருக்கின்றனர் இதனாலேயே பலரும் அவரை அவர்களை உருவ கேலி செய்து வருகின்றனர்.
சில யூடியூப் சேனல்களில் இவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களையும் பரப்பி வருகின்றனர். குஷ்பூ மகள்கள் உடல் எடை குறைந்த காரணம் இதுதான்...! அதுதான்...! என்று ஆளாளுக்கு கதை விட்டு விட வர, அதை பார்த்து கோபமான குஷ்பூ தான் இப்போது போஸ்ட் போட்டு இருக்கிறார். கூடிய சீக்கிரம் தன்னுடைய மகள்களை அவதூறாக பேசியவர்கள் மீது வழக்கு தொடர்க வேண்டும் என்று ரசிகர்கள் குஷ்புவுக்கு அட்வைஸ் செய்கிறார்கள்.
குஷ்புவின் இந்த கோபத்துக்கு ஆதரவாக நடிகை ராதிகா சரத்குமாரும் தனியாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதிலும் ஆரம்பத்திலேயே, "நான் இதை கோபத்தோடு எழுதுகிறேன்" என்று குறிப்பிட்ட ராதிகா, லைக்ஸ் மற்றும் விளம்பரத்துக்காக திரைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு குழந்தைகளை கேலி செய்வது கோழைத்தனம் என்று விளாசியிருக்கிறார்.
"பேச்சு சுதந்திரம் என்பது ஒருவரை புல்லி செய்வதற்கான சுதந்திரம் கிடையாது. விமர்சனம் என்பது கொடூரம் அல்ல. நகைச்சுவை என்பது அவமானப்படுத்துவது அல்ல. பொதுவாழ்க்கையில் இருக்கும் ஒருவரின் மகள்களை கேலி செய்வது காமெடி கிடையாது. அது கோழைத்தனம்" என்று ராதிகா கூறியிருக்கிறார்.














Click it and Unblock the Notifications