குஷ்பூ மகள் கல்யாணத்தில் இரண்டு தாலி.. மேடையில் எமோஷனல் மொமென்ட்.. ரசிகர்கள் கேள்வி இதுதான்
சென்னை: நடிகை குஷ்பூ - இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் முடிந்துவிட்டாலும், அந்த திருமணத்தில் நடந்த ஒவ்வொரு தருணமும் இன்னும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. த்ரிஷா, தமன்னா, ராதிகா, சுஹாசினி, ஆர்த்தி ரவி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த திருமணத்தில், அனைவரையும் நெகிழ வைத்த ஒரு காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது வேறு எதுவுமல்ல... மணமேடையில் அவந்திகாவுக்கு ஒரே ஒரு தாலி அல்ல, இரண்டு முறை தாலி கட்டிய மாப்பிள்ளை ஷ்ரவன் சீனிவாசன் பற்றிய வீடியோதான்.
குஷ்பு மகள் கல்யாணம்
கோவாவில் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்த இந்த திருமணத்தில், முதலில் வழக்கப்படி மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலியை ஷ்ரவன் அவந்திகாவின் கழுத்தில் கட்டினார். மூன்று முடிச்சுகள் முடிந்ததும், அதன்பிறகு தங்கச் செயினில் கோர்க்கப்பட்ட தாலியையும் மீண்டும் அவரது கழுத்தில் அணிவித்தார். இந்த அழகான தருணத்தை பார்த்த உறவினர்கள் கைதட்டி வாழ்த்த, மணமேடை முழுவதும் சந்தோஷம் நிரம்பியது.
ஆனால் அந்த சந்தோஷத்துக்கு நடுவே அனைவரையும் கலங்க வைத்த இன்னொரு சம்பவமும் நடந்தது. தாலி கட்டி முடித்த உடனே, ஷ்ரவன் சீனிவாசனால் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தபடியே நின்ற அவரை, அருகில் இருந்த குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர். அந்த நேரத்தில் அவந்திகா மட்டும் சிரித்தபடி, "என்ன இது?" என்றபடி கணவரைப் பார்த்து கிண்டல் செய்த காட்சியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

ரசிகர்கள் கருத்து
இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள், "உண்மையான காதலுக்கு இதைவிட பெரிய சாட்சி வேணுமா?" என்று பதிவிட்டு வருகின்றனர். மணமேடையில் இன்னொரு உணர்ச்சிகரமான காட்சி நடந்தது. மகள் கழுத்தில் தாலி ஏறிய அந்த நொடியை பார்த்த குஷ்பூவால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த அவரது இளைய மகள் அனந்திதாவும் கண்கலங்கினார். மகள்கள் இருவரும் மிகவும் பாசமாக வளர்ந்தவர்கள் என்பதால், அக்காவின் திருமண தருணம் அனந்திதாவையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
ஆனந்த கண்ணீர்
இதற்கு முன்பே, "சந்தோஷமாக இருந்தாலும் எனக்கு கண்ணீர் வந்துவிடும்" என்று அனந்திதா பலமுறை கூறியிருக்கிறார். விஜயை முதல் முறையாக சந்தித்தபோதும் சந்தோஷத்தில் அழுததாக அவர் சொன்னது ரசிகர்களுக்கு நினைவிருக்கிறது.
இந்த திருமணத்தின் இன்னொரு சிறப்பாக இருந்தது அவந்திகாவின் செல்ல நாய் லியோ. குடும்ப உறுப்பினரைப் போலவே வளர்த்து வரும் அந்த நாயையும் திருமண மேடைக்கு அழைத்து வந்திருந்தார் அவந்திகா. மணமக்களுக்கு அருகிலேயே லியோ அமைதியாக அமர்ந்திருந்த காட்சிகளும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டன.
மணமேடையில் நடந்த சம்பவம்
"செல்லப் பிராணியையும் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக மதித்து இவ்வளவு முக்கியமான நாளில் உடன் வைத்திருப்பது அவந்திகாவின் மனசை காட்டுகிறது" என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த திருமணத்தில் த்ரிஷா, தமன்னா, ராதிகா, சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், சரத்குமார், ஆர்த்தி ரவி உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைவரும் கிட்டத்தட்ட ஒரே கோல்டன் மற்றும் கிரீம் கலர் தீமில் உடை அணிந்து வந்ததால், திருமண புகைப்படங்கள் மேலும் பிரம்மாண்டமாக அமைந்தன.
திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே இயக்குநர் பாக்யராஜ் திடீரென காலமானது, இந்த மகிழ்ச்சியான குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. குஷ்பூ தனது மகளின் திருமண மகிழ்ச்சிக்கும், நெருங்கிய நண்பரின் இழப்புக்கும் இடையே சிக்கித் தவித்த தருணங்களும் பின்னர் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டன.

குஷ்பு மகள் ரிசப்ஷன்
இந்நிலையில், இரண்டு தாலி கட்டிய அந்த நெகிழ்ச்சியான வீடியோ, குஷ்பூ ஆனந்தக் கண்ணீர் விட்ட தருணம், மாப்பிள்ளை ஷ்ரவனின் உணர்ச்சி வசப்பட்ட காட்சி ஆகியவை மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஷ்பூ தன்னுடைய மகள் கல்யாண புகைப்படங்களை தினமும் போஸ்ட் போட்டுக் கொண்டே இருக்கிறார்.
அதை பார்க்கும் ரசிகர்கள் பலரும் அடுத்தது ரிசப்ஷன் தானே? அது எப்ப நடத்த போறீங்க என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். திருமணம் எளிமையாக கோவாவில் நடந்தாலும் சென்னையில் ரிசப்ஷன் பிரமாண்டாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications