மதுரையில் அச்சுதானந்தன் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டத் துடிக்கும் கேரள அரசைக் கண்டித்து, கேரள முதல்வர் அச்சுதானந்தனின் கொடும்பாவியை எரித்து மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரையில், மாவட்ட கோர்ட் முன்பு தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் கூடினர். கேரள அரசு புதிய அணை கட்ட முயல்வதைக் கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் திடீரென அச்சுதானந்தனின் கொடும்பாவியை அவர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.
அப்போது அங்கு போலீஸார் இல்லை. தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த கொடும்பாவியை அணைத்தனர். பின்னர் 15 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications