பாஜகவின் அடுத்த தலைவர் கட்காரி?

தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள பாஜகவின் செயல்பாடுகளை ஆர்எஸ்எஸ் நேரடியாக கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை பதவி விலகச் சொல்லிவிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக தலைவர் பதவிக்கு நிதின் கட்காரியை இறுதி செய்துவிட்டதாகத் தெரிகிறது.
மகாராஷ்டிரததைச் சேர்ந்தவரான கட்காரி அம் மாநில பாஜக தலைவராக உள்ளார். பிராமண சமூகத்தைச் சேர்ந்த இவர் ஆர்எஸ்எஸ் தலைமைக்கும் மிக நெருக்கமானவர் ஆவார்.
ராஜ்நாத்தையடுத்த அந்தப் பதவியைப் பிடிக்க அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி, அனந்த் குமார், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் போட்டியிட்டாலும் அடுத்த தலைவர் டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படுபவராக இருக்கக் கூடாது என்று கூறிவிட்டது ஆர்எஸ்எஸ்.
இதையடுத்து நிதின் கட்காரியை மோகன் பகவத்தே தேர்வு செய்துள்ளார்.
இந்தப் பதவிக்கு கோவா மாநில பாஜக தலைவர் பரிக்கரின் பெயரும் அடிபட்டது. ஆனால், அத்வானியை ஊசிப்போன ஊறுகாய் என விமர்சித்ததால் அவருக்கு வாய்ப்பு அடிபட்டுப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று டெல்லி வந்த கட்காரி மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ராஜ்நாத் சிங்கின் பதவிக் காலம் டிசம்பர் மாத இறுதியில் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications