நாங்க ஜெயிச்சா எல்லோருக்கும் மினரல் வாட்டர் - சிரஞ்சீவி
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் எனது கட்சி வெற்றி பெற்றால் வீட்டுக்கு வீடு இலவசமாக மினரல் வாட்டர் தருவேன் என்று நடிகர் சிரஞ்சீவி வாக்குறுதி அளித்துள்ளார்.
எதைத்தான் வாக்குறுதியாக அளிப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. கலர் டிவி, இலவச அரிசி, காஸ் அடுப்பு, காஸ் சிலிண்டர் என சகலத்தையும் இலவசமாக அளிக்கும் காலம் இது.
இந்த வரிசையி்ல் படு நூதனமாக ஜெயித்தால் அனைவருக்கும் இலவச மினரல் வாட்டர் தருவேன் என்று அள்ளி விட்டுள்ளார் பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி.
ஹைதராபாத் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் சிரஞ்சீவி ஈடுபட்டுள்ளார்.
குக்கட்பள்ளி என்ற இடத்தில் அவர் பேசுகையில்,
ஹைதராபாத்தில் கழிவு நீர் சாக்கடையையொட்டி குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. சில சமயத்தில் குடிநீர் குழாயில் சிறிது துவாரம் ஏற்பட்டாலும் கூட சாக்கடை நீர் கலந்து விடுகிறது.
இதனால் மக்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. மேலும் தற்போது குழாய் வழியாக வரும் குடிநீர் சுத்தம் இல்லாமல் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதனால் நடுத்தர வசதி படைத்த மக்கள் பெரிய மினரல் வாட்டர் கேன் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் அத்தியாவசிய தேவையான குடிநீரை நன்றாக சுத்திகரித்து மினரல் வாட்டராகவே சப்ளை செய்வோம்.
ஆந்திர மக்களை ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. மினரல் வாட்டரை அரசே குழாய்களில் சப்ளை செய்ய முடியும். இதன் மூலம் குடிநீர் வியாபாரத்தைக்கூட முழுமையாக தடை செய்து விடலாம் என்றார் சிரஞ்சீவி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications