கோவை உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு-ஆலோசனைக் கூட்டம்
சென்னை: கோவையில் புதிய தமிழகம் சார்பில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழர் உட்பட உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு கோவை வ.ஊ.சி திடலில் வரும் பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், புதிய தமிழகம் கட்சித் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இதில் புலவர் புலமைபித்தன், கவிஞர் இன்குலாப், திருச்சி வேலுச்சாமி, புதுக்கோட்டை குருமூர்த்தி, கவிதா சரண், புகழேந்தி தங்கராஜ், ராஜேந்திர சோழன், சீதையின் மைந்தன், எஸ்.எம். பாக்கர், பொன். எழுமலை, பன்னீர்செல்வம், ஆற்றலரசு உள்ளிட்ட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், இலங்கையில் முள்வேலி முகாமுக்குள் அடைபட்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர்களின் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த வலியுறுத்தியும் உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
உலகெங்கும் வாழும் தமிழர் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்று, தமிழர்களுக்கு சமூக விஞ்ஞான ரீதியான தீர்வு காண்பதற்கு ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications