எவ்வளவு பேர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்கள்?-ராகுல்

விஜயவாடாவில் கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது நாட்டின் வருங்கால பிரதமர் என்ற தொனியில் சில மாணவர்கள் அவரை சுட்டிக் காட்டிப் பேசியபோது இடைமறித்த ராகுல்,
பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எவராலும் கணிக்க முடியாது. அப்படியிருக்க வருங்கால பிரதமராக எப்படி என்னை நினைக்கிறீர்கள்.
தற்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார். சிறந்த பிரதமர் நிறைவேற்ற வேண்டிய அனைத்துப் பணிகளையும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றார்.
ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக அரசு செயல்படுத்தும் பல நலத் திட்டங்களின் பலன்கள் முழுவதுமாக பயனாளிகளைச் சென்றடைவதில்லை என்று கூறிய ராகுல், எனது தந்தை ராஜீவ் காந்தி 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய அதே நிலை தான் இப்போதும் தொடர்கிறது. அரசு செலவிடும் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே பயனாளிகளைச் சென்றடைகிறது என்றார்.
இதனாலேயே நாட்டில் ஏழை, பணக்காரர்கள் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற அவர், இத்தகைய இடைவெளியைக் களைய ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, சில முயற்சிகளை எடுத்தார் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், சுதந்திரத்துக்குப் பின் அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் மக்களின் வாழ்நாள் நீடித்துள்ளது. இதேபோல பிற நலத் திட்டப் பணிகளும் கொஞ்சம் கொஞ்சமாக பயனளிக்கத் தொடங்கும் என்ற நம்பிக்கை எனக்கு நி்ச்சயம உண்டு.
இந்தியாவில் படித்து வெளிநாட்டுக்குச் செல்வது அதிகரிக்கவில்லை. நமது இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் தவறும் இல்லை. அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை நாம் இங்கேயே உருவாக்கித் தந்தால் அவர்கள் இங்கேயே இருப்பார்கள் என்றார்.
சுமார் 1,500 மாணவர்கள் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடலில் சிலர் இட ஒதுக்கீட்டை எதிர்த்தும், சிலர் ஆதரவாகவும் பேசினர்.
இதையடுத்து எவ்வளவு பேர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்கள் என்று ராகுல் கேட்டதற்கு பெரும்பாலானோர் கையைத் தூக்கி ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.
அரசியல் தவிர புவி வெப்பமடைதல், இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் மாணவர்களின் கேள்விகளுக்கு ராகுல் பதில் தந்தார்.
ராகுல் எழுச்சி..தவற விட்ட காங்-இளங்கோவன்:
இந் நிலையில் ராகுல் காந்தி தமிழத்திற்கு வந்தபோது ஒரு எழுச்சி ஏற்பட்டது. அந்த எழுச்சி நெருப்பை அணையாமல் பாதுகாக்க தமிழக காங்கிரஸ்காரர்கள் தவறி விட்டனர் என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
ஈரோட்டில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சி பலம் மிகுந்த இயக்கம். காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான் இருந்தபோது, தமிழ்நாட்டில் வேறு பல காங்கிரசுகளும் இருந்தன. அவற்றை இணைப்போம் என்றபோது, நமக்குரிய தனித்தன்மை போய்விடும் என்றனர்.
என் பதவி போனாலும் பரவாயில்லை. பலமான கட்சியில் பொறுப்பாளனாக அல்ல, ஒரு தொண்டனாக இருப்பதே எனக்கு பெருமை என்று கட்சிகளை இணைத்தோம். கோஷ்டிகள் என்பது எல்லா கட்சிகளிலும் இருப்பதுதான். காங்கிரசில் அது கொஞ்சம் வெளிப்படையாக தெரியும்.
ராகுல்காந்தி தமிழகத்துக்கு வந்தபோது ஒரு எழுச்சி இருந்தது. ஆனால் இந்த எழுச்சி நெருப்பு அணையாமல் பாதுகாக்க தமிழக காங்கிரசார் தவறி விட்டனர். தற்போது மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இளைஞர் காங்கிரசில் சுமார் 14 லட்சம் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இளைஞர் காங்கிரசில் 14 லட்சம் பேரை சேர்க்க முடிந்தது என்றால், 40 ஆண்டுகளாக காங்கிரசில் இருக்கும் நம்மால் அதைவிட 3 மடங்கு உறுப்பினர்களை சேர்க்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி மீது பொதுமக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்து உள்ளனர். தங்கள் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் உத்தரவாதம் தரும் கட்சியாக காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்றார் இளங்கோவன்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications