டெல்லியில் சிஐஏ தலைவர்-நாராயணனுடன் ஆலோசனை

சிஐஏ தலைவர் லியான் பனீட்டா பாகிஸ்தான் நேற்று பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். தீவிரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் ஆப்கன் நிலவரம் குறித்து அவர் பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ஐஎஸ்ஐ தலைவர் அகமது சுஜா பாஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு காரணமாக, பனீட்டாவின் வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்புகள் குறித்து அதிகார்பபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பனீட்டை பிரதமரை சந்தித்ததை பிரதமர் அலுவலகத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லை நிலவரம் குறித்த முக்கியத் தகவல்களை இரு தரப்பும் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை பனீட்டா டெல்லி வந்தார். 3 நாள் பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார்.
டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அவர் சந்தித்து பேசினார்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒத்துழைப்பது, புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது தொடர்பாக இரு தரப்பும் ஆலோசித்ததாக தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத் தாக்குதல் சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்காவில் கைதாகியுள்ள ஹெட்லி, ராணா குறித்து விவாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
இருப்பினும் அதுகுறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications