கூடுதல் பாதுகாப்பு-நீதிமன்றத்தை அணுகும் பொன்சேகா
கொழும்பு: தனக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை அணுக இலங்கை முன்னாள் முப்படை கூட்டுத் தளபதியான சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார்.
அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக
பொன்சேகா நிறுத்தப்படவுள்ளார்.
சமீபத்தில் பதவி விலகிய பொன்சேகா அரசு வீட்டை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளார் ராஜபக்சே.
அவரது பாதுகாப்புக்கு முதல் கட்டமாக மொத்தம் 25 பாதுகாப்புப்படை வீரர்களை ஒதுக்கிய அரசு, ஒரு ஷிப்டுக்கு 8 வீரர்கள் வீதம் வீரர்களை பாதுகாப்புக்கு வைத்துக் கொள்ளலாம் என்று கூறியதுடன் குண்டு துளைக்காக கார் ஒன்றையும் அவருக்கு ஒதுக்கியது.
இதையடுத்து ராஜபக்சேவை நேரில் சந்தித்த பொன்சேகா, தனது பாதுகாப்புக்கு 100 வீரர்கள் தேவைப்படுவதாகக் கூறினார்.
ஆனால் 2 ராணுவ அதிகாரிகள், 10 அதிரடிப்படை வீரர்கள், 50 பாதுகாப்புப்படை வீரர்கள் அடங்கிய 62 வீரர்களை அனுமதிப்பதாக அரசு அறிவித்தது.
ஆனால், எனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே இந்த பாதுகாப்பு போதாது. வீரர்களின்
எண்ணிக்கையை அதிகரி்க்க வேண்டும் என்று பொன்சேகா கோரியுள்ளார்.
அரசு தனது பாதுகாப்பை அதிகரிக்காவிட்டால் கூடுதல் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் மேலும் அதிபர் தேர்தலில் பேட்டியிட வசதியாத கொழும்பில் தேர்தல் அலுவலகத்தை
திறந்துள்ளார் பொன்சேகா.
தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே பிரசார ஏற்பாடுகளை நிர்வகிக்க இலங்கை முற்போக்கு
முன்னணியின் தலைவர் மங்கள சமரவீராவை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
இந் நிலையில் ராணுவ வீரர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஜனநாயக சுதந்திரம், மனித
உரிமைகளை கட்டிக் காப்பதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.
அடடே...!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications