சபரிமலை பாதுகாப்பு-பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை
டெல்லி: சபரிமலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நவம்பர் 15ம் தேதி சபரிமலையில் 2 மாத யாத்திரை கால கட்டம் தொடங்கியது. இந்த யாத்திரை மண்டலம் ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு ஜோதி தரிசனத்துடன் நிறைவடையும்.
இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து சபரிமலையின் பாதுகாப்பு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்த இன்று பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் இக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் கேரள மாநில டிஜிபி ஜேகப் புன்னோஸ், அம் மாநில கூடுதல் தலைமைச் செயலாளரும், சபரிமலைக்கான சிறப்பு ஆணையருமான ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சபரிமலையில் அதிவிரைவுப் படையினர் உள்பட 14,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 நாளில் ரூ.9.27 கோடி வருமானம்:
இந் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை தொடங்கிய 5 நாட்களில் ரூ.9.27 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
அரவணை பிரசாத விற்பனை மூலம் ரூ.4.05 கோடியும், அப்பம் பிரசாதம் விற்பனை, காணிக்கை மூலம் சுமார் ரூ. 5 கோடியும் வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கோயிலுக்கு ரூ.7.2 கோடி வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அப்பம்,அரவணை வாங்குவதற்கான கூப்பன்கள் தனலட்சுமி வங்கியின் 211 கிளைகள் மூலம் நாடு முழுவதும் வினியோகம்செய்யபட்டு வருகிறது. சன்னிதானத்தில் 24 பிரசாத வினியோக கவுண்டர்கள் 24 மணி நேரமும் செயல்படும். இதில் 90 நிரந்தர ஊழியர்களும், 150 தற்காலிக பணியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.
சபரிமலையில் தொடர் மழை பெய்த போதிலும், பக்தர்கள் கூட்டம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications