போனில் நேர்காணல் நடத்திய விஜயகாந்த் - இன்றைக்குள் வேட்பாளர்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
திமுக சார்பில் இன்று போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.
இன்னொரு முக்கிய கட்சியான தேமுதிகவும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாகி விட்டது. அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், போனிலேயே நேர்காணலை நடத்தி முடித்துள்ளார்.
வந்தவாசி வேட்பாளர் தேர்வு தொடர்பாக இன்று விஜயகாந்த் முதலில் ஆலோசனை நடத்தினார். பின்னர் போட்டியிட விரும்பி மனு தாக்கல் செய்திருந்த 6 பேருடன் இன்று அவர் போனில் பேசி நேர்காணல் நடத்தினார். இதையடுத்து வந்தவாசி வேட்பாளர் இன்றைக்குள் முடிவாகி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications