கர சேவை-வாஜ்பாய்க்கு எதிரான வீடியோ ஆதாரம்

மற்ற தலைவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்திய லிபரான் கமிஷன், வாஜ்பாயிடம் விசாரணையே நடத்தவில்லை. ஆனால், அவரையும் எப்படி அறிக்கையில் குற்றம் சாட்டியது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந் நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முதல் நாளான 1992ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி லக்னொவில் கர சேவகர்கள் மத்தியில் வாஜ்பாய் பேசிய ஒரு பொதுக் கூட்டத்தின் வீடியோ தான் அவருக்கு எதிராக கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யக் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
சுமார் 2 லட்சம் கர சேவகர்கள கூடிய அந்தக் கூட்டத்தில் பேசிய வாஜ்பாய், பிரச்சனைக்குரிய இடத்தில் புதிதாக கட்டுமானப் பணிகளைச் செயயத் தான் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அங்கு கர சேவைக்கு தடையில்லை, பஜனை நடத்தவும் கீர்த்தனைகள் பாடவும் தடையில்லை.
நீங்கள் நடமாடாமலோ அல்லது கட்டுப்பாட்டுடனோ இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. பஜனையும் கீர்த்தனையும் ஒருவரால் மட்டும் செய்ய முடியாது. கூட்டம் கூடித் தான் ஆக வேண்டும், கீர்த்தனைகளை உட்கார்ந்து தான் பாட வேண்டும்.
அங்கு (அயோத்தியில்) சும்மா நின்று கொண்டே இருக்க முடியுமா?. ஏராளமான கூரிய கற்களும் பாறைகளும் உள்ள அந்த இடத்தில் எப்படி உட்காருவது?. இதனால் அந்த இடத்தை நாம் 'சமப்படுத்தியே' ஆக வேண்டும். அப்போது தான் நாம் அங்கே அமர முடியும்.
மேலும் அந்த இடத்தில் சில யாகங்களும் செய்ய வேண்டியுள்ளது, இதற்காக சில கட்டுமானங்களையும் செய்ய வேண்டியுள்ளது. இதையெலலாம் சுப்ரீம் கோர்ட் தடுக்கவில்லை.
நாளை (டிசம்பர் 6ம் தேதி) என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. அதை தீர்மானிக்கப் போவது கர சேவகர்கள் தான்.
நானும் அயோத்திக்குச் செல்லவே விரும்புகிறேன். ஆனால், என்னை டெல்லிக்குத் திரும்பச் சொல்லிவிட்டார்கள்.
இவ்வாறு அந்த வீடியோவில் வாஜ்பாய் பேசியுள்ளார்.
இந்த வீடியோ 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி ஐ.பி.சிங் என்ற வழக்கறிஞரால் லிபரான் கமிஷனிடம் சமர்பிக்கப்பட்டது.
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வாஜ்பாயையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று அந்த வழக்கறிஞர் கோரினார். ஆனால், அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்த நிலையில் அந்தக் கோரிக்கையை லிபரான் கமிஷன் நிராகரித்துவிட்டது.
இந் நிலையில் தான் லிபரான் கமிஷன் தனது அறிக்கையில், பாபர் மசூதி இடிப்புக்கு பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களுடன் வாஜ்பாய் பெயரையும் சேர்த்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications