லஷ்கர் தொடர்புகளை பாக். அறுக்க வேண்டும்- ஒபாமா எச்சரிக்கை
வாஷிங்டன்: லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாதக் குழுக்களை பயன்படுத்தும் செயலை பாகிஸ்தான் உடனடியாகக் கைவிட வேண்டும். அதை இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு அவர் 2 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி...
ஒபாமா தனது கடிதத்தில், பாகிஸ்தானுடன் புதிய பாதுகாப்பு உறவை மேற்கொள்ள அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகளில் நிலவும் பதட்டத் தன்மை குறைக்கப்பட வேண்டும் என்பதை ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளுடன் பாகிஸ்தான் மென்மையான அணுகுமுறையைக் கையாளுவது, அவர்களை துணைக்குச் சேர்த்துக் கொள்வது போன்றவை இந்தியாவுக்கு எதிரான செயல்களாக தோன்றுகிறது.
இது பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு முரணாக உள்ளது. அல் கொய்தா தீவிரவாதிகளுடன் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு லஷ்கர் போன்ற அமைப்புகளுக்கு உதவுவது நியாயமற்றது, ஏற்றுக் கொள்ள
முடியாதது.
அல் கொய்தா, ஆப்கான் தலிபான், ஹக்கானி நெட்ஒர்க், லஷ்கர் இ தொய்பா, தெஹரீக் இ தலிபான் ஆகிய ஐந்து தீவிரவாதகக் குழுக்களுக்கும், தனக்கும் உள்ள தொடர்புகள், உறவுகள் குறித்து பாகிஸ்தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இந்த அமைப்புகளுடனான உறவுகளை பாகிஸ்தான் திட்டவட்டமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.
மேலும், இந்த மாற்றங்களை பாகிஸ்தான் செய்யாவிட்டால் ஆப்கானிஸ்தானில் வெற்றி கிடைக்காது. பாகிஸ்தானும் தீவரவாதத்தின் பிடியில் சிக்காமல் தப்ப முடியாத நிலை ஏற்படும்.
பாகிஸ்தானுக்கு ராணுவ பொருளாதார உதவிகள் அதிக அளவில் வழங்கப்படும். இது தவிர, நெருக்கமான உறவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், தீவிரவாதக் குழுக்களுடனான உறவை பாகிஸ்தான் முற்றிலும் கைவிட வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா.
ஒபாமாவின் இந்தக் கடிதத்தை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் பாகிஸ்தான் வந்திருந்தபோது சர்தாரியிடம் நேரிலேயே கொடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications