246 பவுன் போலி நகையை வங்கியில் அடகு வைத்த அடேங்கப்பா பிரமுகர்கள் !
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அய்யம்பாளையம் அருகே உள்ள லட்சுமி விலாஸ் வங்கியில் 246 பவுன் போலி நகைகளை அடகு வைத்த ஐந்து பேர் மீது திண்டுக்கல் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தில் உள்ளது லட்சுமி விலாஸ் வங்கி. இந்த வங்கியில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கொடைரோடு பெரியகருப்பத்தேவர், இவரது மருமகன் ரவி, திண்டுக்கல் ஆர்.வி.எஸ். நகரைச் சேர்ந்த மலர்ராஜ் (40), ரவியின் மனைவி கவிதா, நண்பர் முரளி ஆகியோர் 246 பவுன்களை அடகு வைத்தனர்.
இந்த நகைகளை கடந்த நவம்பர் மாதம் 18 ம் தேதி அன்று நகைகளை மறு மதிப்பீடு செய்து, 16 லட்சத்து 40 ஆயிரம் பணம் பெற்றனர்.
இந்த நிலையில் வங்கியில் அடகு வைத்த நகைகள் அனைத்தும் முழுவதும், போலியானவை என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக வங்கி கிளை மேலாளர் ஞானசேகரன், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதில் விசாரணை நடத்திய போலீசார், மலர்ராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்கள் தலைமைறைவு ஆகி விட்டனர்.
இதில் பெரியகருப்பத்தேவர் ஓய்வுபெற்ற வன அலுவலர் ஆவார். இவரது மருமகன் ரவி கொடைக்கானலில் மின்வாரிய ஊழியராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications