தேவநாதன் அசிங்கம்- மச்சேஸ்வரர் கோவிலை புறக்கணிக்கும் பெண்கள்

தேவநாதன் கோவிலை எப்படியெல்லாம் தனது அசிங்கத்திற்குப் பயன்படுத்தினார் என்ற தகவல் படிப்படியாக வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. குறிப்பாக பெண்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
மேலும் கோவில் கருவறைக்குள் வைத்து தனக்கு மயக்க மருந்து தடவி கற்பழித்தார் தேவநாதன் என்று வெளியான செய்திதான் பெண்களை பெரிதும் பாதித்துள்ளது.
மச்சேஸ்வரர் கோவிலுக்கு வரவே பெண்கள் தயங்குகிறாரக்ள்.
மச்சேஸ்வரர் கோவிலுக்கு வந்து பூஜை செய்தால் தண்ணீர் கண்டம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பேர் வருவார்களாம்.
ஆனால் தேவநாதன் விவகாரம் வெளிவர துவங்கியதிலிருந்து பக்தர்கள் வருவது குறைந்து போய் விட்டது.
முன்பெல்லாம் நீண்ட நேரம் திறந்திருக்கும் இந்தக் கோவில் தற்போது காலை அரை மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என சுருக்கமாக திறந்து மூடப்பட்டு விடுகிறது.












Click it and Unblock the Notifications