ஏற்கனவே 17% புகை மாசைக் குறைத்துள்ளது இந்தியா - ஜெய்ராம் ரமேஷ்

புகை மாசுக் குறைப்பு குறித்து நேற்று லோக்சபாவில் ஜெய்ராம் ரமேஷ் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், 2005ம் ஆண்டு அளவிலிருந்து, அடுத்த 11 ஆண்டுகளுக்குள் (2020க்குள்) 20 முதல் 25 சதவீத அளவுக்கு புகை மாசு குறைக்கப்படும்.
அதேசமயத்தில், இதை சர்வதேச சட்டங்களின் மூலமாக இந்தியாவின் மீது திணிக்க முடியாது. இந்தியாவே விரும்பி இதை செய்கிறது. இதில் இந்தியாவின் மீது நிர்ப்பந்தங்களை ஏற்க முடியாது.
புகை மாசு அளவுக் குறைப்பு தொடர்பாக திட்டக் கமிஷன்தான் அளவைப் பரிந்துரைத்தது. நாம் ஏற்கனவே 1990 முதல் 2005 வரை 17.6 சதவீத புகை மாசைக் குறைத்துள்ளோம்.
தனது 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் புகை மாசு அளவைக் குறைக்கும் வகையிலான வளர்ச்சித் திட்டத்தை திட்டக் கமிஷன் இணைக்கவுள்ளது. எனவே 20 முதல் 25 சதவீத புகை மாசுக் குறைப்பு என்பது சாத்தியமானதுதான்.
புவிவெப்ப மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. காரணம், நாம் பருவ மழைகளை நம்பியுள்ளோம், இமயமலைப் பனிச் சிகரங்கள் உருகத் தொடங்கியுள்ளன, சுற்றுச்சூழலுக்கு இன்றியமையாத கட்டமைப்புகள் நம்மிடம் உள்ளன, ஜார்க்கண்ட், ஒரிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் வன வளம் முழுமையாக அழியும் அபாயம் உள்ளது. எனவே புவிவெப்ப மாற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளில் நாமும் ஆக்கப்பூர்வமாக ஈடுபட வேண்டியுள்ளது.
உண்மையில், இந்தியாவுக்கு புவிவெப்ப மாற்றத்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து தகவலே நம்மிடம் இல்லை. இது மிகவும் வேதனையான விஷயம். மேற்கத்திய நாடுகளிடமிருந்து புவிவெப்ப மாற்றம் குறித்து நமக்கு கிடைக்கும் தகவல்களில் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் இடம் பெறுவதில்லை. எனவே நமது விஞ்ஞானிகள் மூலம் விரிவான அறிவியல் ஆய்வை மேற்கொண்டு நமது பாதிப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
இதுதொடர்பாக பல்வேறு ஆய்வகங்களை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
கோபன்ஹேகன் மாநாட்டில் ..
பிரதமர் எனக்கு பிறப்பித்துள்ள அறிவுரை என்னவென்றால் - உலகின் தட்பவெப்பம் அதிகரிக்க இந்தியா முக்கியக் காரணம் இல்லை என்பதை நாம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால் புவிவெப்ப மாற்றத்தைத் தீர்க்க உலக நாடுகளுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாகவும், உபோயகமான முறையிலும், இந்தியாவுக்குப் பாதகம் இல்லாத வகையிலும் முயற்சிக்க வேண்டும்.
உண்மையில் நாம் ஏற்படுத்தும் புகை மாசை விட மேற்கத்திய நாடுகள்தான் அதிக அளவில் மாசை ஏற்படுத்துகின்றன. அதற்காக உங்களை விட நாங்கள் குறைவான மாசைத்தான் உருவாக்குகிறோம், எனவே இன்னும் சற்று கூடுதலாக மாசை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என நாம் கூற முடியாது.
கோபன்ஹேகன் மாநாட்டுக்கு திறந்த மனதுடன் செல்கிறோம், பாசிட்டிவான மன நிலையில் செல்கிறோம். இளக்கமாக இருக்க தயாராக உள்ளோம்.
புவிவெப்ப மாற்றம் தொடர்பாக அமெரிக்காவுடன் அடிக்கடி பேசுவதால் நாம் நமது நாட்டை அமெரிக்காவுக்கு விற்று விட்டதாக இடதுசாரிகள் கூறுவது வேதனையாக உள்ளது.
மாசுக் குறைப்பு எப்படி...?
- 2011, டிசம்பர் மாதத்திற்குள், அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் திறன் தரப் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்படும்.
- மின்சாரத்தை சேமிக்கும் வகையில் கட்டடங்களில் கட்டமைப்புகளை உருவாக்குவது ஊக்கப்படுத்தப்படும். உள்ளூர் மாநில அரசுகள் இதை நிறைவேற்ற அறிவுறுத்தப்படும்.
- தொழிற்சாலைகள் அதிக அளவில் மின்சாரம், எரிபொருளைப் பயன்படுத்துவதைக் குறைக்க சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
- இந்தியாவில் தற்போது உள்ள வனங்கள், நாட்டில் வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களில் 10 சதவீதத்தை உள்ளிழுத்துக் கொள்கின்றன. எனவே வன வளம் குறையாமல் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
- புதிதாக உருவாக்கப்படவுள்ள நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட மின் திட்டங்களில் பாதி, புதிய சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக அமையும்.
இதை அடிப்படையாக வைத்துத்தான் கோபன்ஹேகன் மாநாட்டை இந்தியா சந்திக்கவுள்ளது. கோபன்ஹேகனில் வெற்றிகரமான உடன்பாடு ஏற்பட்டால், அனைவருக்கும் பொருத்தமானதாக இருந்தால், நமது கவலைகள் கருத்தில் கொள்ளப்பட்டால், இதை விட அதிகம் செய்யவும் இந்தியா தயாராக உள்ளது.
இளக்கமாக போவது என்பது நாட்டை விற்று விட்டதாக அர்த்தம் இல்லை. வேகமாக தீர்வு காண்பதற்காக இறங்கிப் போவது என்றே பொருள் கொள்ள வேண்டும். நாம் இந்த உலகில் தனித்து வாழவில்லை. இந்தியாவுக்கான சிறந்த உடன்பாட்டை மனதில் கொண்டுதான் நாம் கோபன்ஹேகன் போகிறோம் என்றார் ரமேஷ்.
கோபன்ஹெகன் மாநாடு-அன்புணி பங்கேற்பு:
இந் நிலையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் நடைபெறும் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்கிறார்.
பசுமைத் தாயகம் சார்பில் அன்புமணியும் அவரது மனைவி சௌமியா அன்புமணியும் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இதற்காக அவர்கள் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications