மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் விரிசல்-பல ரயில்கள் தாமதம்
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தண்டவாளம் சீர் செய்யப்பட்ட பின் இயக்கப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக வந்தன.
மதுராந்தகம்-கருங்குழி இடையே இன்று காலை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததைப் பார்த்த ரயில்வே ஊழியர் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தந்தார்.
இதையடுத்து சென்னை நோக்கி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி- நாகர்கோவில் சிறப்பு ரயில், சேது எக்ஸ்பிரஸ், புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
விரிசல் சரி செய்த பின் சுமார் 2 மணி நேரத்துக்குப் பின்னர் தான் ரயில் சேவை சீரானது.
இதனால் பல ரயில்கள் தாமதமாக இயங்கின.
பாண்டியன், நெல்லை, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த விரிசலுக்கு முன்பாக கடந்து சென்று விட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து சேர்ந்துவிட்டன.
ஆனால், அதன்பிறகு வந்த ரயில்கள் தாமதமாகின.
கோவை-சென்னை சிறப்பு ரயில்கள்:
இந் நிலையில் சென்னையில் இருந்து வரும் 11ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் ஜனவரி மாதம் 1ம் தேதி வரை இயக்கப்படும்.
சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இச்சிறப்பு ரயில்கள், அடுத்த நாள் காலை 6.50 மணிக்கு கோவை சென்றடையும்.
அதேபோல, கோவையில் இருந்து வரும் 12ம் தேதி முதல், சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில் ஜனவரி 2ம் தேதி வரை இயக்கப்படும்.
கோவையில் இருந்து 9.15 மணிக்கு புறப்படும் இச்சிறப்பு ரயில்கள், அடுத்த நாள் காலை 5.15 மணிக்கு சென்னை வந்தடையும்.
பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications