ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்திய மாணவர் தாக்கப்பட்டார்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இன்று மேலும் ஒரு இந்திய மாணவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய மாணவர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 1400 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் ஆஸ்திரேலிய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். ஆஸ்திரேலிய அரசும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவதாக உறுதி அளித்தது.
எனினும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று காலை மெல்போர்ன், ப்ரன்ஸ்விக் வெஸ்ட் சாலையில் 23 வயது இந்திய மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கோலியர் கிரெசன்ட் என்ற இடத்தில் தனது கேர்ள் ஃபிரண்டின் வீட்டின் முன்பாக டாக்ஸியை நிறுத்தி்விட்டு, காத்திருந்தபோது அடையாளம் தெரியாத ஒரு கும்பல், மாணவரை தாறுமாறாக தாக்கியுள்ளனர்.
டாக்சி டிரைவர் தகவல் கொடுத்ததும் மாணவரின் கேர்ள் ஃபிரண்ட் கீழே ஓடிவந்துள்ளார். அப்போது மாணவன் மார்பு மற்றும் வயிற்றில் அடிபட்டு கீழே விழுந்து கிடந்தார். மாணவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, அவர் உடனடியாக போலீசில் புகார் செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications