'சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள்'
திருச்செந்தூர்: சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் கோமதி கணேசனுக்காக பிரச்சாரம் செய்த விஜயகாந்த் பேசியதாவது:
இந்தத் தொகுதியில் ஏன் தேர்தல் வந்தது என்பதை சிந்திக்க வேண்டும். அரசுக்கு உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள். அப்போதுதான் ஆளும் கட்சியினருக்கு பயம் வரும்.
தேமுதிக 21வது கட்சி என்றார்கள். அப்படிச் சொன்னவர்களை இன்று காணவில்லை. தற்போது களத்தில் திமுக, அதிமுக, தேமுதிக மட்டுமே உள்ளன. தைரியம் இருந்தால் அவர்களும் வந்து நிற்கலாம்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின் விலைவாசி குறையவில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆனால் இங்கு அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் 62 லட்சம் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. உங்களால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்க முடியுமா?. எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் படிக்காத இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்போம்.
தேமுதிக உருவானதில் இருந்து அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது. மார்ட்டின் லூதர் கிங் என்றாவது ஒருநாள் மக்கள் மத்தியில் தலைவராக நிற்பேன் என்றார். அதே போல் நானும் ஒருநாள் நிற்பேன்.
தேமுதிகவில் இஸ்லாமியர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications