சீனாவில் இன்னொரு துணை தூதரகம்

Subscribe to Oneindia Tamil

செங்க்டு (சீனா): சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிஷுவானில் இலங்கை துணை தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.

மேற்கே சீனாவின் தொழில்துறை மையமாக விளங்குவது சிஷுவான் மாகாணம். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் இருந்து இலங்கை உடனான வர்த்தக தொடர்புகள் அதிகரித்து வந்துள்ளன.

கடந்த 2008ம் ஆண்டில் இப்பகுதியில் இருந்து சீனாவுக்கு 14.27 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. டிவி, மோட்டார் என்ஜின்கள், உதிரி பாகங்கள், ஜவுளி உள்ளிட்டவை இங்கிருந்து இலங்கைக்கு ஏற்றமதி செய்யப்படுகின்றன.

மறுமுனையில் இலங்கையில் இருந்து கணிமங்கள், தேயிலை மற்றும் உருக்கு ஆகியவற்றை சிஷுவான் பெற்றுவருகிறது. துணை தூதரகம் திறக்கப்பட்டுள்ள தகவலை சீனாவுக்கான இலங்கை தூதர் கருணதிலகா அம்முனுகாமா தெரிவித்தார்.

இந்தியாவை அனைத்து திசைகளிலும் முடக்க இலங்கையுடன் சீனா தனது உறவை வலுப்படுத்தி வரும் நிலையில் இந்த துணைத் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+