வைரஸ் காய்ச்சல்-பெண் பலி

Subscribe to Oneindia Tamil

களக்காடு: காளக்காடு அருகே வைரஸ் காய்ச்சல் தாக்கிய பெண் இறந்தார். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியதில் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் காளக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரபுரத்தில் உள்ள ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த முருகன் மனைவி ஜெயந்தி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார்.

அவர் காளக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசசை பெற்று வந்தார். மேலும் அவரது உடல் நிலை மோசமானதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபபட்டு கடந்த 17ம் தேதி இறந்தார். அவருக்கு 3 மகள்கலும், 1 மகனும் உள்ளனர்.

காய்ச்சலினால் பெண் இறந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+