இந்தியா வந்த கப்பலை பிடித்த சோமாலிய கொள்ளையர்கள்
Subscribe to Oneindia Tamil

எம்டி பர்மோனி என்ற அந்த கப்பலில் 17 இந்தோனேஷியர்கள், 5 சீனர்கள், ஒரு நைஜீரியர், ஒரு வியட்நாம் நாட்டவர் ஆகியோர் இருந்தனர்.
ஏடன் வளைகுடாவில் வைத்து இந்தக் கப்பலை சிறை பிடித்துள்ள சோமாலியக் கொள்ளையர்களுடன் கப்பல் நிறுவனம் பேச்சுவார்த்தையைத் துவக்க முயற்சி எடுத்துள்ளது. இந்த கப்பல் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
இந்த வாரத்தில் கொள்ளையர்களிடம் சிக்கியுள்ள 3வது சரக்குக் கப்பல் இதுவாகும். இதற்கு முன் பிரிட்டன், கிரீஸ் நாடுகளைச் சேர்ந்த இரு கப்பல்களை கொள்ளையர்கள் பிடித்து வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications