யுஎஸ்-மர்ம ஆசாமி சரமாரி துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் மர்ம ஆசாமி ஒருவர், கண்மூடித்தனமாக சாலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ஓடியதில் எட்டுபேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2007ம் ஆண்டு வெர்ஜீனியா தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் திடீரென தென்கொரிய மாணவர் ஒருவர் 32 பேரை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தது.

அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல இன்றும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ரிச்மாண்ட் அருகே அப்போமேட்டாக்ஸ் கவுன்டி பகுதியில் துப்பாக்கியோடு திரிந்த ஆசாமி ஒருவர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினார்.

இதில் அந்த ஆசாமியின் மனைவி மற்றும் குழந்தை உட்பட குறைந்தபட்சம் எட்டு பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிபது.

மரங்களின் நடுவே ஒளிந்துகொண்டு போலீசாருக்கு 'போக்கு' காட்டிவந்த அருகில் உள்ள வனப் பகுதிக்குள் தப்பி ஓடி ஒளிந்துகொண்டுள்ளார்.

இவரை பிடிக்க சுமார் 150 போலீசார் ஆயுதங்களுடன் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த ஆசாமி யார், எதற்காக இப்படி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+