பென்னாகரம் இடைத் தேர்தல்-பாஜக புறக்கணிப்பு
சென்னை : பென்னாகரம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்துள்ளது.
பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடக்காததால் பெண்ணாகரம் இடைத்தேர்தலை பா.ஜ.க புறக்கணிக்கும்.
கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் தலைவர் நிதின் கட்காரி தலைமையில் இந்தூரில் வரும் 17ம் தேதி நடைபெறும். தேசிய பொதுக் குழு கூட்டம் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறும்.
வாஜ்பாய் தலைமையில் நடந்த பா.ஜ.க, ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் வேகமாக உயரும் விலையேற்றத்தால், ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
விலையேற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி வரும் மார்ச் மாதம் பா.ஜ.க, சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும். விலையேற்றம் குறித்து கிராமம் தோறும் மக்களிடையே பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் பா.ஜ.க விற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க, நிதின் கட்காரி விரைவில் தமிழகத்திற்கு வருவார் என்றார்.












Click it and Unblock the Notifications