முடங்கிப் போன பொது சேவை மையங்கள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவடடத்தில பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டு ஓன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், எந்த அரசு பணியும் வழங்காததால் மூடும் சூழ்நிலைக்கு மையங்கள் தள்ளப்பட்டுள்ளன.

கிராம மக்களுக்கு அரசின் திட்டங்கள், சான்றிதழ்கள் எளிதாக கிடைக்கவும், கிராம பகுதிகளும் அரசின் சேவைகளை மக்கள் பெற்று கொள்ளவும் வசதியாக தமிழகம் முழுவதும் கிராமங்களில் பொது சேவை மையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டன.

தமிழக அரசு 3 ஐ இன்போடேக் என்ற நிறுவனத்திற்கு இந்த பணியை வழங்கியது. இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் கிராம பகுதிகளில் பொது சேவை மையம் தொடங்க கிராம வாரியாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செயயப்பட்டவர்கள் அந்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.25 லட்சம் டெபாசிட் தொகையையும் செலுத்தினர்.

பின்னர் அதற்கான அலுவலகம், தொலைபேசி, இன்டர்நெட் இணைப்பு, ஊழியர்கள் நியமனம் என பல கடமைகளையும் பொது சேவை மைய ஓதுக்கீடு பெற்றவர்கள் செய்து முடித்தனர்.

ஆனால் மையம் தொடங்கி 18 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை எந்த அரசு பணியும் வழங்கப்படவில்லை. இதனால் மின்சார செலவு, தொலைபேசி வாடகை, ஊழியர் சம்பளம், அலுவலக வாடகை என மாதம் ரூ.5 ஆயிரம் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டதாகவும், ரூ.2 லட்சம் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், நெல்லை மாவட்ட பொது சேவை மைய நடத்துனர்கள் நல சங்க அகமது மைதீன், செயலாளர் முத்து பெருமாள் மற்றும் நிர்வாகிகள் மக்கள் குறை தீர்க்கும் நாளில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பொன்னரசு கூறுகையில், நெலலை மாவட்டத்தில் 40 பொது சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மையங்களுககு இதுவரை எந்த அரசு பணியும் வழங்கப்படவில்லை.

தமிழக முதல்வர் கருணாநிதி இந்த மையங்களை மக்கள் கணிணி மையமாக மாற்ற உத்தரவிட்டார். எனினும் இதுவரை அதுவும் செய்ய்படவில்லை.

இதற்காக நாங்கள் செலவிட்ட தொகையை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்று தருவதுடன் நஷ்ட ஈடாக ரூ.2 லட்சம் பெற்று தர வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+