ஈராக் மருத்துவர்களுக்கு நொய்டா மருத்துவமனையில் பயிற்சி
நொய்டா: ஈராக்கைச் சேர்ந்த ஆறு மருத்துவர்களுக்கு நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
நொய்டாவில் உள்ள மெட்ரோ இருதவியல் கழகம் மற்றும் மருத்துவமனையில் ஈராக் மருத்துவர்களுக்கு இருதய சிகிச்சை தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் புருஷோத்தம் லால் கூறுகையில், 'வெளிநாடுகளைச் சேர்ந்த மூத்த டாக்டர்களும், செவிலியர்களும் இந்தியாவிற்கு பயிற்சிக்காக வருவது பெருமை அளிக்கக் கூடிய விஷயம்.
மருத்துவத் துறையின் அபூர்வமான மற்றும் சிக்கலான சில சிகிச்சை முறைகளை நாம் கையாளும் விதம் குறித்து தெரிந்து கொள்ள இவர்கள் இங்கு வருகிறார்கள் என்றார்.
பயிற்சிக்கு வந்துள்ள ஈராக் டாக்டரான அம்மர் அப்துல் சலாம் ஹமீது அல் சுல்தான் கூறுகையில், மெட்ரோ இருதவியல் கழகம் மற்றும் மருத்துவமனை பயிற்சிக்கு சிறந்ததாக விளங்குகிறது என்றார்.












Click it and Unblock the Notifications