நவீன் சாவ்லாவை நீக்க கோபாலசாமி கோரிய பரிந்துரைக் கடிதம் வெளியீடு
டெல்லி: தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லாவை நீக்கக் கோரி அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி எழுதிய பரிந்துரைக் கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நவீன் சாவ்லா ஒரு கட்சி சார்பாக செயல்படுகிறார் என பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவருக்கு அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி கடந்த ஜனவரி மாதம் 93 பக்க கடிதம் எழுதினார்.
மேலும் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் பரிந்துரைத்திருந்தார் கோபாலசாமி. தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் கடிதம் எழுதியது அதுவே முதல் முறையாகும்.
ஆனால் இந்தக் கோரிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாக நிராகரித்து விட்டது. மேலும் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் பின்னர் சாவ்லாவை நியமித்தது.
இந்த நிலையில் கோபாலசாமியின் கடிதத்தை வெளியிட வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இதற்கு தலைமைத் தேர்தல் ஆணையரின் (நவீன் சாவ்லா) ஒப்புதல் பெறுமாறு குடியரசுத் தலைவர் அலுவலகம் தகவல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.
ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையேயான கடிதப் போக்குவரத்து குறித்து வெளியிட சட்டத்தில் இடமில்லை என நவீன் சாவ்லா ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அக் கடிதத்தை வெளியிடுமாறு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.ரணவத் என்பவர் விடுத்த கோரிக்கை விடுத்து விண்ணப்பித்தார்.
இதை ஏற்று தற்போது கடிதத்தை சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications