கன்னியாகுமரி: கடலோர பாதுகாப்புக்கு அதி நவீன படகுகள்
கன்னியாகுமரி: கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க மரைன் போலீசாரின் கண்காணிப்புப் பணிகளுக்காக ரூ.18 கோடியில் 12 அதிநவீன ரோந்து படகுகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்ததை அடுத்து, நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
தமிழக கடற்பகுதியில் கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, மரைன் போலீசார் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போலீசாருக்கு அதிநவீன படகுகள் மற்றும் கருவிகள் வழங்க தமிழக அரசு முடிவுசெய்தது. அதன்படி ரூ. 18 கோடியில் 12 அதிநவீன விசைப்படகுகள் வாங்கப்பட்டன.
குளச்சல், மண்டபம், மணல்மேல்குடி உள்ளிட்ட 12 மரைன் காவல் நிலையங்களுக்கும் இந்த விசைப்படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில் 2 கடற்படை ஊழியர், ஒரு எஸ்ஐ, 4 போலீசார் இருப்பார்கள். இவை 24 மணி நேரமும் கடற்கரை பகுதிகளில் ரோந்து செல்லும்.
சுமார் 20 கடல் மைல் வரை கண்காணிக்கவும், தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்கும் பணியுடன் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்கவும் இவை பயன்படுத்தப்படும்.
இந்த படகில் அதிநவீன தொலை தொடர்பு வசதிகள், விஎச்எப் உயிர் காக்கும் கருவிகள், முதலுதவி வசதிகள், நவீன ஆயுதங்கள் உள்ளன.
32 அடி நீளமும், 11.5 அடி உயரமும் கொண்ட இப்படகுகள், குமரி மாவட்டம், சின்னமுட்டம் துறைமுகத்திற்கு நேற்று வந்திறங்கின.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications